மேலும் செய்திகள்
ஆடு திருடிய 'ஜோடி'போலீசில் சிக்கியது
19-Feb-2025
ஆடு திருடிய இருவர் கைதுநாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்து அரியாகவுண்டம்பட்டி மற்றும் ஆத்துார் பிரதான சாலையில் எஸ்.எஸ்.ஐ., செல்வம் தலைமையில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு பஸ் ஸ்டாண்ட் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரிடமும் விசாரித்தனர். அப்போது, இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். மேலும், அவர்கள் மீது ஆடு முடி ஒட்டிக் கொண்டிருந்தது. இதனால், போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து விசாரித்தனர்.இதில் மெட்டலா, குரங்காத்து பள்ளத்தை சேர்ந்த சங்கர் மகன் குமரேசன், கொல்லிமலை, பெரக்கரை நாடு அரப்புலி மகன் விஜயகுமார், 29 என்பது தெரிந்தது. இந்நிலையில், நேற்று காலை பச்சுடையாம்பாளையத்தை சேர்ந்த துரைசாமி மகன் இளங்கோவின் வீட்டில் கட்டியிருந்த ஆட்டை காணவில்லை என புகார் அளித்தார். இதையடுத்து விசாரித்த போது, ஆட்டை திருடி சென்று மறைத்து வைத்ததை விஜயகுமார், குமரேசன் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து நாமகிரிப்பேட்டை போலீசார் இருவரையும் கைது செய்து சிறைக்கு அனுப்பினர்.
19-Feb-2025