உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நகை, பணம் திருடியவர் கைது

நகை, பணம் திருடியவர் கைது

நகை, பணம் திருடியவர் கைதுகுமாரபாளையம்:குமாரபாளையம் அருகே, கல்லங்காட்டுவலசு விவேகானந்தா கார்டன் பகுதியை சேர்ந்தவர் எலும்பு முறிவு டாக்டர் யுவராஜ், 42; இவரது வீட்டின் கதவை உடைத்து, கடந்த பிப்., 8ல் மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடி சென்றனர். குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.நேற்று காலை, காவேரி நகர் புதிய பாலம் செல்லும் வழியில், குமாரபாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படி பஸ்சுக்காக நின்றிருந்த நபரை அழைத்து விசாரணை செய்தனர்.அதில், சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த அருண்குமார், 32, என்பதும், டாக்டர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்த நபர்களில், இவரும் ஒருவர் என்பது தெரியவந்தது.அருண்குமாரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை