உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பாவை கல்வி நிறுவனங்களில்ஆண்டு விழா கொண்டாட்டம்

பாவை கல்வி நிறுவனங்களில்ஆண்டு விழா கொண்டாட்டம்

பாவை கல்வி நிறுவனங்களில்ஆண்டு விழா கொண்டாட்டம்நாமக்கல்,:பாச்சல், பாவை கல்வி நிறுவனங்களில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். ஜோஹோ நிறுவன இணை நிறுவனரும், முதன்மை விஞ்ஞானியுமான ஸ்ரீதர் வேம்பு கலந்துகொண்டார். பாவை பொறியியல் கல்லுாரி முதல்வர் பிரேம்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் நடராஜன் பேசுகையில், ''2024-25ம் கல்வியாண்டில் பாவை பொறியியல் கல்லுாரி, தமிழகத்தில் மாணவர் சேர்க்கையில், 3-வது இடம் பிடித்துள்ளது. 8-வது ஆண்டாக மாநில அளவில், அண்ணா பல்கலை சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது,'' என்றார்.விழாவில், துணைத்தலைவர் மணிசேகரன், செயலாளர் பழனிவேல், பொருளாளர் ராமகிருஷ்ணன், இணை செயலாளர் பழனிவேல், இயக்குனர்(சேர்க்கை) வழக்கறிஞர் செந்தில், இயக்குனர் (நிர்வாகம்) ராமசாமி, இயக்குனர் (பள்ளிகள்) சதிஷ், இயக்குனர் (மாணவர் நலன்) அவந்தி நடராஜன், அனைத்து கல்லுாரிகளின் முதல்வர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். தாளாளர் மங்கை நடராஜன் நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !