மேலும் செய்திகள்
தீ மிதித்து அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
06-Mar-2025
பள்ளிப்பாளையத்தில் அலகு குத்திஊர்வலமாக வந்த பக்தர்கள்பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அடுத்த, ஆவாரங்காடு பகுதியில், பிரசித்தி பெற்ற அக்னி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாத திருவிழா நடைபெறும். இந்தாண்டு விழா, கடந்த இரண்டு வாரத்திற்கு முன், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் அபி ேஷகம், சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்து வந்தன.நேற்று காலை ஏராளமான பக்தர்கள், அக்ரஹாரம் காவிரி ஆற்று பகுதியில் இருந்து, அலகு குத்தி ஊர்வலமாக, கோவிலுக்கு வந்தனர். பண்டிகையை முன்னிட்டு, சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது.
06-Mar-2025