உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விசைத்தறி கூடங்களுக்கு விடுமுறை வெறிச்சோடிய பள்ளிப்பாளையம்

விசைத்தறி கூடங்களுக்கு விடுமுறை வெறிச்சோடிய பள்ளிப்பாளையம்

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் ஏராளமான விசைத்தறி தொழிலாளர்கள், தீபாவளி கொண்டாட வெளியூர்களுக்கு சென்றதால், பரபரப்பாக உள்ள ஊர் வெறிச்சோடி காணப்படுகிறது.நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் முக்கிய தொழிலாக விசைத்தறி உள்ளது. இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். வழக்கமாக தொழிலாளர்களுக்கு தீபாவளிக்கு விடுமுறை, 3 நாட்கள் அளிக்கப்படும். தற்போது, தீபாவளி பண்டிகைக்கு உற்பத்தி செய்யப்பட்ட துணிகள், அதிகளவில் விற்பனை செய்யாமல் தேக்கமடைந்துள்ள. இதனால், விசைத்தறி தொழிலாளர்களுக்கு, 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, பெரும்பாலான தொழிலாளர்கள் வெளியூர் மற்றும் சுற்றுலா சென்று விட்டனர்.எப்போதும் பரபரப்பாகவும், தறி சத்தம் கேட்டுக் கொண்டு இருந்த பள்ளிப்பாளையம் பகுதியில், ராஜவீதி, ஆர்.எஸ்.சாலை, காந்திபுரம் வீதி, காவேரி, வசந்தநகர், ஆவராங்காடு, ஆவத்திபாளையம், ஆயக்காட்டூர் பகுதிகளில் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.விசைத்தறி கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், வியாபாரம் அதிகளவு நடைபெறாது என்பதால் ஓட்டல்கள், டீக்கடைகள், பேக்கரி உள்பட பல கடைகளும் மூடப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை