மேலும் செய்திகள்
கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள் குதுாகலம்
22-Oct-2025
ராசிபுரம், ராசிபுரம்-நாமக்கல் சாலையில், நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஐப்பசியில், தேர் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி கடந்த, 21ல் பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. 23ல் கம்பம் நடும் விழா நடந்தது. வரும் நவ., 4ல் பூவோடு எடுக்கும் நிகழ்ச்சிக்கு, கொடியேற்றம் நடக்கவுள்ளது. நவ., 5ல் பொங்கல் வைபவம், 6ல் தீமிதி விழா, மாலை தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி, 8ல் சத்தாபரணம் நிகழ்ச்சி நடக்கிறது. நவ., 8 வரை மண்டகப்படி கட்டளையும், 10 முதல், 23 வரை விடையாற்றி கட்டளையும் நடக்கவுள்ளது. இந்த கட்டளை நிகழ்ச்சிகளின் போது, அம்மன் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நேற்று அம்மன் செங்கோல் ஏந்திய மகாராணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பகலில் நடந்த தீர்த்தக்குட ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
22-Oct-2025