மேலும் செய்திகள்
ஹோலி பண்டிகையை கொண்டாடிய வடமாநில தொழிலாள
15-Mar-2025
வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தவடமாநில தொழிலாளர் 10 பேர் மீட்புதிருச்செங்கோடு:திருச்செங்கோடு அடுத்த சீனிவாசம்பாளையத்தில், வடமாநில தொழிலாளர்களை வீட்டில் அடைத்து வைத்திருப்பதாக, எஸ்.பி., ராஜேஸ்கண்ணனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து, திருச்செங்கோடு டி.எஸ்.பி., கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் தீபா, வெங்கட்ராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, ஒருவீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் நயடீப் பீகாரா, 46, பினய்தாஸ், 38, டிப்பு பீகாரா, 35, ராஜேஸ் பயூரி, 35, டீப்நாத் பயூரி, 25, ஜீட்டன் நீகாரா, 50, மற்றும் சிறுவர்கள் நான்கு பேர் என, மொத்தம், 10 பேரை மீட்டனர். அவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று உணவு, உடை கொடுத்து சொந்த மாநிலத்துக்கு செல்ல, ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருச்செங்கோடு போலீசார், வடமாநில தொழிலாளர்களை வீட்டில் அடைத்து வைத்த கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
15-Mar-2025