உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பு

புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பு

நாமக்கல் : மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள, மூன்று கிரிமினல் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி, நாமக்-கல்லில் வக்கீல்கள் நீதிமன்றங்களை புறக்கணித்து, ஆர்ப்பாட்-டத்தில் ஈடுபட்டனர்.கிரிமினல் சட்டங்களான, இந்திய தண்டனை சட்டம் பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.,), இந்திய குற்றவியல் விசாரணை முறைச்சட்டம் பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.,), இந்திய சாட்சிய சட்டம் பாரதிய சாக்ஷய அதிநியம் (பி.எஸ்.ஏ.,) என, பெயர் மாற்றம் செய்யப்பட்டு, சட்ட பிரிவுகளில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, நேற்று முதல், நாடு முழுதும் அமல்படுத்தப்பட்டுள்ளன.இந்நிலையில், 3 புதிய சட்டங்களையும் திரும்பப்பெற வலியு-றுத்தி, நாமக்கல்லில் வக்கீல்கள் சங்கத்தினர், நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஒரு வாரம் நீதிமன்றங்களை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இதனால், நாமக்கல் நீதிமன்றத்தில், நேற்று நடக்க வேண்டிய வழக்கு விசாரணைகள் அனைத்தும் மறு தேதிக்கு ஒத்திவைக்கப்-பட்டன. இதையடுத்து, புதிய சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறக்கோரி, நீதிமன்றம் முன் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு-பட்டனர். நாமக்கல் குற்றவியல் வக்கீல்கள் சங்க தலைவர் அய்-யாவு தலைமை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ