| ADDED : ஜூலை 15, 2011 12:50 AM
நாமக்கல்: 'நாமக்கல் வேளாண் விரிவாக்க மையத்தில், விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கும் வகையில், தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது' என, வேளாண் உதவி இயக்குனர் பேபிகலா தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில், விவசாயிகளுக்கு பயிர் சாகுபடி சம்மந்தப்பட்ட பிரச்னைகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனை வழங்கும் வகையில், வேளாண் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.இம்மையத்தின் மூலம், விவசாயிகள் பயிர் சம்பந்தமான பூச்சி நோய் தாக்குதல், நுண்ணூட்ட சத்து குறைபாடு மற்றும் உரப் பரிந்துரை குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் தொழில்நுட்ப ஆலோசனை பெறலாம். வேளாண் களப்பணியாளர்கள் அனைத்து விவசாயிகளையும் சந்திக்க இயலாத தருணங்களில், இம்மையம் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமையும். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தகவல் மையத்தில், வேளாண் பணியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். விவரம் தேவைப்படும் விவசாயிகள் வெள்ளிக்கிழமை வேளாண் விரிவாக்க மையத்துக்கு நேரில் வந்து ஆலோசனை பெறலாம்.