உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தாறுமாறு வாகனங்களால்போக்குவரத்து நெரிசல்

தாறுமாறு வாகனங்களால்போக்குவரத்து நெரிசல்

தாறுமாறு வாகனங்களால்போக்குவரத்து நெரிசல்நாமக்கல்: நாமக்கல் முதலைப்பட்டியில் புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது.இதனால் நகர் பகுதியில் உள்ள மக்கள், புதிய பஸ் ஸ்டாண்ட் சென்று, அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு மப்சல் பஸ்களில் சென்று வருகின்றனர். இந்நிலையில், நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சலையின் சர்வீஸ் சாலையில் விதிமுறைகளை மீறி ஒருவழிப்பாதைகளில் கனரக வாகனங்கள் செல்கின்றன. இதனால் பஸ் ஸ்டாண்ட் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, விதிமீறும் வாகனங்களை, 'சிசிடிவி' கேமரா மூலம் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை