மது விற்றவர் கைது
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக, அப்பகுதி மக்கள் போலீசில் புகாரளித்தனர்.இதையடுத்து, நேற்று, திருச்செங்கோடு மதுவிலக்கு போலீசார் பெரியார் நகர் பகுதியில் கண்காணித்தனர். அப்போது அங்கு சட்ட விரோதமாக மது விற்னை செய்த சீனிவாசன், 42, என்பவரை மது விலக்கு போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து, 240 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.