உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சாலை பாதுகாப்புவிழிப்புணர்வு

சாலை பாதுகாப்புவிழிப்புணர்வு

சாலை பாதுகாப்புவிழிப்புணர்வுகுமாரபாளையம்:குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், இளைஞர் செஞ்சிலுவை சங்கம், இளைஞர் செஞ்சுருள் சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் ரேணுகா தலைமை வகித்தார். சிறப்பு பேச்சாளராக நெடுஞ்சாலை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முருகேசன் பேசினார். ஹெல்மெட், காப்பீடு, சீட் பெல்ட், ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். இதற்கான ஏற்பாடுகளை கல்லுாரி இளைஞர் செஞ்சிலுவை சங்கம், இளைஞர் செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் கோவிந்தராஜ் செய்திருந்தார். மாணவ, மாணவியர், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !