மேலும் செய்திகள்
பத்ரகாளியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்
30-Jan-2025
மூன்று கோவில்களின்தேரோட்டம் கோலாகலம்வெண்ணந்துார்:வெண்ணந்துார் ஒன்றியத்துக்குட்பட்ட ஆர்.புதுப்பாளையம் கிராமத்தில் பெரியாண்டிச்சி அம்மன், காமாட்சியம்மன், நாகமாயம்மன் கோவில் என, மூன்று கோவில்கள் உள்ளன. இக்கோவிலில் மாசி மாத திருவிழா நடைபெறும். அதன்படி, நேற்று முன்தினம் நாகமாயம்மன் கோவில் மயான கொள்ளை நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தது.நேற்று மாலை, பெரியாண்டிச்சி அம்மன், காமாட்சியம்மன், நாகமாயம்மன் உள்ளிட்ட, மூன்று கோவில்களின் தேர் அலங்கரிக்கப்பட்டு, கோவிலில் இருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக சென்று இறுதியாக கோவிலை அடைந்தது. இதில், ஆர்.புதுப்பாளையம், கல்லாங்குளம், பட்டணம் பகுதியை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்துச்சென்றனர்.
30-Jan-2025