பாலியல் தடுப்பு விழிப்புணர்வு
கடத்துார்:--கடத்துார் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி மற்றும் பஸ் ஸ்டாண்டில் எஸ்.ஐ., சேகர் தலைமையிலான போலீசார், பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் தடுப்பு குறித்து, பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தனியாக இருக்கும் வீடுகள், பண்ணை வீடுகள், மூத்த குடிமக்கள் வசிக்கும் இடங்களில் கட்டாயம், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்த வேண்டும். அவ்வாறு பொருத்தும் பட்சத்தில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்க முடியும், என்றனர். நிகழ்ச்சியில் மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள், பள்ளி மாணவ, மாணவியர் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.