உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குமாரபாளையத்தில் காசநோய் விழிப்புணர்வு பேரணி

குமாரபாளையத்தில் காசநோய் விழிப்புணர்வு பேரணி

குமாரபாளையத்தில் காசநோய் விழிப்புணர்வு பேரணிகுமாரபாளையம்:குமாரபாளையத்தில், உலக காசநோய் தினத்தையொட்டி, அரசு மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.குமாரபாளையம், அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் பாரதி, கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். ராஜம் தியேட்டர் முன் துவங்கிய பேரணி, குமாரபாளையத்தில் முக்கிய சாலைகளின் வழியாக சென்று, பஸ் ஸ்டாண்டில் நிறைவு பெற்றது. தனியார் கல்லுாரி மாணவ, மாணவியர் காசநோய் குறித்த விழிப்புணர்வு கோஷங்கள் போட்டபடியும், துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்தவாறும் வந்தனர். மாவட்ட காசநோய் அலுவலக நலக்கல்வியாளர் ராமசந்திரன், உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ