உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காளியம்மன் கோவிலில்வாராஹி பஞ்சமி வழிபாடு

காளியம்மன் கோவிலில்வாராஹி பஞ்சமி வழிபாடு

காளியம்மன் கோவிலில்வாராஹி பஞ்சமி வழிபாடுராசிபுரம்:ராசிபுரம் ரயில் நிலையம் அருகில் உள்ள, காளியம்மன் கோவிலில் பங்குனி மாத தேய்பிறை வாராஹி பஞ்சமி வழிபாட்டில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.ராசிபுரம் ரயில் நிலையம் அருகில், காளியம்மன் கோவில் உள்ளது. இதன் வளாகத்தில் வாராஹி அம்மன் ஆலயம் உள்ளது. மாதந்தோறும் கோவிலில் வளர்பிறை, தேய்பிறை பஞ்சமி திதி அன்று சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெறும். இந்நிலையில் பங்குனி மாத தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு உற்சவர் வாராஹி அம்மனுக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், இளநீர், திருமஞ்சனம், மஞ்சள், குங்குமம், சந்தனம், பன்னீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு, மலர்களால் அர்ச்சனை செய்த பின் பஞ்சதீபம் மஹா தீபம் காண்பிக்கப்பட்டது. பெண் பக்தர்கள் தேங்காயில் தீபம் ஏற்றி வழிபட்டனர். அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ