உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கோவில் திருவிழாக்களால்ஆடு விற்பனை அதிகரிப்பு

கோவில் திருவிழாக்களால்ஆடு விற்பனை அதிகரிப்பு

கோவில் திருவிழாக்களால்ஆடு விற்பனை அதிகரிப்புஎருமப்பட்டி:எருமப்பட்டி யூனியன், பவித்திரத்தில் திங்கள்தோறும் ஆட்டுச்சந்தை நடக்கிறது. நவலடிப்பட்டி, கஸ்துாரிப்பட்டி, முட்டாஞ்செட்டி உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, ஆடு வளர்க்கும் விவசாயிகள், தங்கள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.தற்போது, இப்பகுதிகளில், பங்குனி மாத மாரியம்மன் ‍‍‍கோவில் திருவிழாக்கள் துவங்கியுள்ளன. பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்ற, நேற்று போட்டி போட்டு ஆடுகளை வாங்கி சென்றனர்.இதனால் ஆடுகளின் தேவை அதிகரித்ததால், விலையும் உயர்ந்தது. நேற்று மட்டும், 17 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக, சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி