டூவீலர் மோதி முதியவர் பலி
டூவீலர் மோதி முதியவர் பலிகரூர்:கரூர் அருகே, டூவீலர் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.கரூர் அருகே, அரசு காலனி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன், 75; இவர் கடந்த, 23 மாலை, கரூர்-திருச்சி சாலை காந்தி கிராமம் பகுதியில், நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக தான்தோன்றிமலை பாரதிதாசன் நகரை சேர்ந்த கிரிஜா, 37, என்பவர் ஓட்டி சென்ற, சுசூகி ஆசஸ் டூவீலர், சீனிவாசன் மீது மோதியது. அதில், கீழே விழுந்ததில் தலையில் படுகாயம் சீனிவாசன், திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.இதுகுறித்து, சீனிவாசனின் மனைவி ஜெயமணி, 65, கொடுத்த புகாரின்படி, தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.