உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சந்து கடைகளை மூடபா.ஜ., ஆர்ப்பாட்டம்

சந்து கடைகளை மூடபா.ஜ., ஆர்ப்பாட்டம்

சந்து கடைகளை மூடபா.ஜ., ஆர்ப்பாட்டம்சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் ஒன்றியத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும், சந்து கடைகளை மூட வலியுறுத்தி, பா.ஜ., சார்பில் சேந்தமங்கலம் சின்ன தேர்முட்டி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றிய தலைவர் நடேசன் வரவேற்றார். இதில், சந்து கடைகளால் ஏழை மக்கள் பாதிக்கப்படுகின்றனர். 24 மணி நேரமும் மது விற்பனை ‍செய்யும் சந்து கடைகளை மூட வேண்டும் எனக்கோரி கோஷம் எழுப்பினர். ஓ.பி.சி., அணி தலைவர் கணபதி, ஒன்றிய துணை தலைவர்கள் கவிதா, ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை