உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.1.50 கோடியில் சாலைப்பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

ரூ.1.50 கோடியில் சாலைப்பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

நாமக்கல்: நாமக்கல் ஒன்றியம், சிவியாம்பாளையம் பஞ்சாயத்தில், 46.36 லட்சம் ரூபாய் மதிப்பில், மயான சாலை மேம்பாட்டு பணி-களும், மாரப்பநாய்க்கன்பட்டி பஞ்சாயத்தில், 47.71 லட்சம் ரூபாய் மதிப்பில், அழகியகவுண்டம்பாளையம் கிராமம் வரை, சாலை மேம்பாட்டுப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அணியார் பஞ்சாயத்தில், கொளந்தாபாளையம் பகுதியில், 19.76 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை மேம்பாட்டு பணிகளுக்கு அனு-மதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், நருவலுார் பஞ்சாயத்து, தொட்டியபாளையத்தில், 22.49 லட்சம் ரூபாய் மதிப்பில், தார்ச்-சாலை மேம்படுத்தும் பணி துவக்க விழா நடந்தது. நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம், பூமி பூஜை செய்து சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார். பி.டி.ஓ.,க்கள் தனம், பிரபாகரன், பஞ்., தலைவர்கள் நலங்கிள்ளி, பழனியம்மாள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை