உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டாஸ்மாக் பாரில் தீ விபத்துரூ.2.50 லட்சம் பொருள் சேதம்

டாஸ்மாக் பாரில் தீ விபத்துரூ.2.50 லட்சம் பொருள் சேதம்

டாஸ்மாக் பாரில் தீ விபத்துரூ.2.50 லட்சம் பொருள் சேதம்நாமக்கல்:நாமக்கல் கணேசபுரம் புதுத்தெருவை சேர்ந்தவர் சேகர், 55. இவர், நாமக்கல் - திருச்சி சாலை மரக்கடை அருகே, பொன்னுசாமி, 63 என்பவருக்கு சொந்தமான இடத்தில், டாஸ்மாக் பார் வைத்து நடத்தி வருகிறார். இங்கு, மாலை, 4:00 மணிக்கு, பாரில் உள்ள பிரிட்ஜ் பிரீசரில் இருந்து தீப்பற்றியது. மளமளவென பரவிய தீ, பார் முழுவதும் பற்றி எரிந்தது. அப்போது, பாரில் சரக்கு அடித்துக்கொண்டிருந்த, 'குடி'மகன்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.நாமக்கல் தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், பாரில் இருந்து தின்பண்டங்கள், பர்னிச்சர், தட்டு முட்டு சாமான்கள் எரிந்து நாசமாகின. இவற்றின் மதிப்பு, 2.50 லட்சம் ரூபாய். சம்பவம் தொடர்பாக, நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை