முதுநிலை தட்டச்சு தேர்வு352 மாணவர்கள் பங்கேற்பு
முதுநிலை தட்டச்சு தேர்வு352 மாணவர்கள் பங்கேற்புராசிபுரம்:ராசிபுரம் அடுத்த தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில், தொழில் நுட்பத்துறை சார்பில் தட்டச்சு தேர்வு நடந்தது. ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சிங்களாந்தபுரம், புதுச்சத்திரம், மங்களபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 37 தட்டச்சு பயிற்சி பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் இளநிலை, முதுநிலை தேர்வை எழுதினர். நேற்று முன்தினம் இளநிலை தட்டச்சு தேர்வு நடந்தது. இதில், ஆங்கிலத்தில், 468 மாணவர்கள், தமிழில், 208 மாணவர்கள் உள்பட, 608 பேர் இளநிலை தேர்வை எழுதினர். நேற்று முதுநிலை தட்டச்சு தேர்வு நடந்தது. ஆங்கிலத்தில், 213 பேர், தமிழில், 139 பேர் என, 352 பேர் தேர்வு எழுதினர்.