மேலும் செய்திகள்
குட்கா கடத்திய 2 பேர் கைது
23-Feb-2025
நாமக்கல்: நாமக்கல்-பரமத்தி சாலை, வள்ளிபுரம் பகுதியில், நேற்று மதியம், 2:00 மணிக்கு, நல்லிபாளையம் போலீசார் வாகன சோத-னையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டு-பிடிக்கப்பட்டது. விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம், ஒட்-டன்சத்திரத்தை சேர்ந்த மொபைல் கடை வைத்துள்ள முகமது ஜலீல், 41, கம்பத்தை சேர்ந்த டிரைவர் சையத் லியாஸ்தீன், 39, என்பது தெரியவந்தது.மேலும், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து தேனிக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், 400 கிலோ புகையிலை பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
23-Feb-2025