உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆக்கிரமிப்பு சாலை அளவிடும் பணி இருதரப்பு மோதலால் பாதியில் நிறுத்தம்

ஆக்கிரமிப்பு சாலை அளவிடும் பணி இருதரப்பு மோதலால் பாதியில் நிறுத்தம்

சேந்தமங்கலம் : முத்துக்காப்பட்டி பஞ்., மேதரமாதேவியில் ஆக்கிரமிப்பு சாலையை அளவிடும் பணி, இரு தரப்பினர் மோதலால் பாதியில் நிறுத்தப்பட்டது.சேந்தமங்கலம் அருகே, முத்துக்காப்பட்டி பஞ்., மேதரமாதே-வியில் இருந்து சாலப்பாளையம் பிரிவு வரை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பஞ்., தலைவர் அருள்ராஜேஸ், கடந்த, நான்கு ஆண்டாக நுாதன போராட்டம் நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த மாதம், பஞ்., அலுவலகம் முன் உடுக்கை அடித்து போராட்டம் நடத்தினார். இதையடுத்து, வருவாய் துறையினர், ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து தருவ-தாக உறுதியளித்தனர். அதை தொடர்ந்து, நேற்று வருவாய் ஆய்வாளர் பிரகாஷ் மற்றும் சேந்தமங்கலம் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில், 20க்கும் மேற்பட்ட போலீசார், மேதரமாதேவியில் இருந்து சாலையை அளவிடும் பணியை துவங்கினர். அப்போது, அங்கு குடியிருப்போர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சாலையை அளவிடும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. சாலை முழுதும் அளவீடு செய்ய வேண்டும் என, பஞ்., தலைவர் அருள்-ராஜேஸ், ஆர்.ஐ., அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்.இதுகுறித்து, ஆர்.ஐ., பிரகாஷ் கூறுகையில், ''சாலை ஆக்கிர-மிப்பை அளவிடும் பணி, 75 சதவீதம் முடிந்தது. இருதரப்பினர் வாக்குவாதத்தால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை கருதி, கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் அளவீடு செய்ய, தாசில்தாரிடம் தெரி-விக்கப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ