உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தற்கொலைக்கு துாண்டியவர்களை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

தற்கொலைக்கு துாண்டியவர்களை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, வெடியரசம்பாளையத்தை சேர்ந்தவர் சம்பூரணம், 45. இவர், 'மைக்ரோ பைனான்ஸ் மற்றும் கந்து வட்டி கும்பல் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததாக கூறி, கடந்த, 28ல் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இவரை தற்கொலைக்கு துாண்டியவர்களை கைது செய்யக்கோரி, பள்ளிப்பாளையம் தெற்கு ஒன்றிய மா.கம்யூ., சார்பில் நேற்று, பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றிய செயலாளர் -ரவி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், அசோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை