நாமக்கல் அரசு மகளிர் கல்லுாரியில் இலவச பரதநாட்டிய கலை பயிற்சி
நாமக்கல்: கலை பண்பாட்டுத்துறை சார்பில், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரியில், பகுதி நேர கலை பயிற்சியான பரத-நாட்டியம் பயிற்சி துவங்கியது.கல்லுாரி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு கலை அறி-வியல் கல்லுாரிகளில் பயிலும் மாணவ, மாணவியரில், பகுதி நேர-மாக கலைகள் பயில விருப்பம் உள்ளவர்களுக்கு, தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில், வாரம் இரண்டு நாட்கள் பகுதி நேர கலை பயிற்சி அளிப்பதற்கு அரசாணை வெளியிடப்-பட்டுள்ளது.செவ்வியல் கலை, கிராமியக்கலை, கவின் கலை ஆகிய பிரிவு-களில் ஏதேனும் ஒரு கலையில் முதற்கட்டமாக, 100 கல்லுாரி-களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இக்கலை பயிற்சி அளிக்க தொகுப்பூதியத்தில் கலை ஆசிரியர்கள் நியமனம் செய்-யப்படுகின்றனர்.குரலிசை, தேவாரம், மிருதங்கம், பரதநாட்டியம், ஓவியம், நவீன சிற்பம், கைவினை, கிராமிய பாடல், கரகம், தப்பாட்டம், ஒயி-லாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை வடிவங்களில், 100 பகுதி நேர ஆசிரியர்கள், இரண்டு மணி நேர பயிற்சி அளிக்கப்-பட உள்ளனர்.நாமக்கல் மாவட்டத்தில், சேந்தமங்கலம் அரசு கலை கல்லுா-ரியில், தேவாரம், நாமக்கல் அறிஞர் அண்ணா கலை கல்லுாரியில், கைவினை, ராசிபுரம் திருவள்ளுவர் கலை கல்லுாரியில், தமிழிசை கிராமிய பாடல், குமாரபாளையம் அரசு கல்வியல் கல்லுாரியில், கிராமிய பாடல், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லுாரியில், பரதநாட்டியம் பயிற்சி அளிக்கப்படுகிறது.நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லுாரியில், கலை பண்பாட்டுத்துறை சார்பில், இலவச பரதநாட்டிய பயிற்சி நேற்று முன்தினம் முதல் துவங்கியது. கல்லுாரி முதல்வர் கோவிந்-தராசு தலைமை வகித்தார். பரதநாட்டிய பயிற்றுனர் தேவயாணி பயிற்சியளித்தார். வாரம், இரண்டு நாட்கள் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியின் ஒருங்கிணைப்பாளராக பேராசி-ரியர் ஷர்மிளாபானு செயல்பட்டார்.