போதையில் தகராறு தொழிலாளி அடித்து கொலை
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே, போதையில் நடந்த தகராறில் தொழி-லாளி அடித்து கொலை செய்யப்பட்டார். நாமகிரிப்பேட்டை அடுத்த பட்டணம் முனியப்பன்பாளையம், குச்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் தமிழரசன், 50, கூலித்தொழி-லாளி. நேற்று காலை இவர் போதையில், இதே பகுதியை சேர்ந்த முத்துசாமி மகன் லோகநாதன், 49, என்பவரிடம் தகராறில் ஈடுபட்-டுள்ளார். இதனால், நேற்று மாலை லோகநாதன் மற்றும் உறவி-னர்கள் மூன்று பேர் தமிழரசனிடம் நேரில் சென்று பேசியுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாய் தகராறு கை கலப்பாக மாறியது.இதில் லோகநாதன் மற்றும் உறவினர்கள் தமிழரசனை தாக்கிய-தாக கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த தமிழரசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழரசன் இறந்தார். நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசா-ரித்து வருகின்றனர்.