மேலும் செய்திகள்
ஸ்ரீ பக்த ஆஞ்சநேயருக்குசிறப்பு அபிஷேகம்
23-Mar-2025
ராகவேந்திரருக்கு சிறப்பு பூஜைசேந்தமங்கலம்:அக்கியம்பட்டி, குரு ராகவேந்திரர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. சேந்தமங்கலம் யூனியன், அக்கியம்பட்டியில் பிரசித்தி பெற்ற குரு ராகவேந்திரா கோவில் உள்ளது. இங்கு நேற்று காலை கோமாதா பூஜை நடந்தது. தொடர்ந்து குங்கும அர்ச்சனை, பின்னர் மூலவர் குரு ராகவேந்திரர், லட்சுமி நரசிம்மர், ராமர், சீதை, விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட 24 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின், ராகவேந்திரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
23-Mar-2025