உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இஸ்லாமியர்கள் ரம்ஜான் கொண்டாட்டம்

இஸ்லாமியர்கள் ரம்ஜான் கொண்டாட்டம்

இஸ்லாமியர்கள் ரம்ஜான் கொண்டாட்டம்நாமக்கல்:ரம்ஜான் பண்டிகை, நேற்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி அனைத்து பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. நாமக்கல்லில், நேற்று காலை, 7:30 மணிக்கு, சேந்தமங்கலம் சாலையில் உள்ள பேட்டை அஞ்சுமனே பள்ளிவாசல் முன், முத்தவல்லி தவுலத்கான் தலைமையில் முஸ்லிம்கள் ஊர்வலமாக சென்று தட்டாரத்தெரு, சேலம் சாலை வழியாக ஈத்கா மைதானத்தை அடைந்தனர். அங்கு, 8:00 மணிக்கு சிறப்பு தொழுகை நடந்தது. இதனை ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் சாதிக்பாஷா நடத்தினார்.இதில், துணைத்தலைவர் பாரூக்பாஷா, செயலாளர் நியாமத், பொருளாளர் மகபூர் பாஷா உள்ளிட்ட பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் திரளான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். தொழுகை முடிந்ததும், ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி, ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். இதேபோல், கோட்டை திப்புசுல்தான் பள்ளிவாசல், மாருதி நகர் மற்றும் நகர் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி