| ADDED : ஜூலை 02, 2024 06:52 AM
எருமப்பட்டி : பத்து வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலி-பரை, போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.எருமப்பட்டி யூனியன், வரகூர் அருந்ததியர் தெருவை சேர்ந்-தவர், 10 வயது சிறுவன். இவர், கடந்த ஏப்., 21ல் அக்கம் பக்-கத்தில் உள்ள சிறுவர்களுடன் கிணற்றில் குளிக்க சென்றார். அப்-போது, அதே பகுதியை சேர்ந்த கரண், 26, என்ற வாலிபர், பாம்பு வருவதாக கூறி, சிறுவர்களை பயமுறுத்தி உள்ளார். இதனால், சிறுவர்கள் பயந்து அங்கிருந்து ஓடிய நிலையில், 10 வயது சிறுவனை மட்டும் தடுத்து நிறுத்தி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து புகாரில், எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாலிபர் கரணை தேடி வந்தனர். பின் கடந்த, 16ல் அவரை போக்சோ வழக்கில் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், கரணை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டதையடுத்து, சிறையில் உள்ள அவரிடம், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை வழங்கினர்.