உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காளியம்மன் கோவிலை கிராம கணக்கில் பதிவேற்ற கோரி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

காளியம்மன் கோவிலை கிராம கணக்கில் பதிவேற்ற கோரி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

எலச்சிபாளையம், எலச்சிபாளையம் யூனியன், இலுப்புலி கிராமம், மாரப்பம்பாளையம் அருந்தியர் தெரு அருகே, 2 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில், காளியம்மன் கோவில் அமைத்து, 30 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். அதன் பக்கத்து நிலத்தை சேர்ந்த தனிநபர் ஒருவர், கோவில் முன் ஆக்கிரமிப்பு செய்து மண்ணை கொட்டி பாதை அமைத்துள்ளார். இதனை அளவீடு செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியதன் அடிப்படையில், அதிகாரிகள் அளவீடு செய்தனர். ஆனால், காளியம்மன் கோவில் இடத்தை அரசு பதிவேட்டில் பதிவேற்றம் செய்யவில்லை.எனவே, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலத்தை மீட்டு, சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, நேற்று காலை, 11:00 மணியளவில், இலுப்புலி வி.ஏ.ஓ., அலுவலகம் முன், மா.கம்யூ., கிளை செயலாளர் தங்கவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ், எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், கிழக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் எண்ணற்ற கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து, ஆர்.ஐ., அனுராதாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை