உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நீட் தேர்வை ரத்து செய்ய ம.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய ம.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

நாமக்கல், 'நீட்' தேர்வை ரத்து செய்யக்கோரி, நாமக்கல்லில் கிழக்கு, மேற்கு மாவட்ட, ம.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ம.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர் தலைமை வகித்தார். மாநில மகளிரணி துணை செயலாளர் சந்திரா பேசினார். ஆர்ப்பாட்டத்தில், 'நீட்' தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், தமிழகத்திற்கு நிதி தராத மத்திய அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி