உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கழிவறையின்றி அவதி

கழிவறையின்றி அவதி

கழிவறையின்றி அவதிவெண்ணந்துார்:வெண்ணந்துார் ஒன்றியத்துக்குட்பட்ட, தொட்டியவலசு பஞ்., கிழக்கு வலசு பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவர்கள் நலன் கருதி, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த பெண்கள் கழிவறை கட்டப்பட்டது. உரிய பராமரிப்பில்லாததால், இந்த கழிவறை சில ஆண்டுகளாகபூட்டியே கிடக்கிறது. இதனால் அப்பகுதி பெண்கள், திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. தொட்டியவலசு பஞ்., கிழக்கு வலசு பகுதியில் பெண்கள் நலன் கருதி, கழிவறையை சுற்றியுள்ள முட்புதர்களை அகற்றி, அவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி