2வது மனைவி கழுத்தறுத்து கொலைதப்பியோடிய 2வது கணவனுக்கு காப்பு
2வது மனைவி கழுத்தறுத்து கொலைதப்பியோடிய 2வது கணவனுக்கு 'காப்பு'பள்ளிப்பாளையம்:பாதரை பகுதியில், இரண்டாவது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தப்பியோடிய, இரண்டாவது கணவனை, வெப்படை போலீசார் கைது செய்தனர்.திருச்சியை சேர்ந்தவர் அருண்பாண்டியன், 35; குளித்தலையை சேர்ந்தவர் சித்ரா, 26; இருவரும் கணவன், மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், அருண்பாண்டியனுக்கும், சித்ராவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த பாதரையில், வாடகை வீட்டில் கணவன், மனைவியாக வசித்து வந்தனர். இருவரும், வெப்படையில் உள்ள நுாற்பாலையில் வேலை செய்து வந்தனர். சித்ரா, அடிக்கடி மொபைல் போனில் யாரிடமோ பேசி வந்துள்ளார்.இதனால், சித்ராவை, அருண்பாண்டியன் கண்டித்துள்ளார். அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அருண்பாண்டியன், கத்தியால் சித்ராவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பினார்.வெப்படை போலீசார் விசாரணையில், நெட்டவேலாம்பாளையம் பகுதியில் தலைமறைவாக இருந்த அருண்பாண்டியனை நேற்று கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.