உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தெலங்கானாவில் இருந்து வரத்தான 2,600 டன் அரிசி

தெலங்கானாவில் இருந்து வரத்தான 2,600 டன் அரிசி

நாமக்கல்: நாமக்கல் பகுதியில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு தேவையான கோதுமை, அரிசி, சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்களும், கோழி தீவனத்திற்கு தேவையான மக்காச்சோளம், கடுகு புண்ணாக்கு, சோயா உள்ளிட்ட மூலப்பொருட்கள் வடமாநிலத்தில் இருந்து வாங்கி வரப்படும்.அந்த வகையில், தெலங்கானா மாநிலத்தில் இருந்து, 2,600 டன் ரேஷன் அரிசி வாங்கி அங்கிருந்து 42 வேகன்கள் கொண்ட சரக்கு ரயில் மூலம், நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்டது. அங்கிருந்து லாரிகளில் ஏற்றி, நல்லிபாளையத்தில் உள்ள தமிழ்நாடு உணவு பொருள் வாணிப கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது.அதேபோல், கோழித்தீவன அரவை ஆலைகளுக்கு தேவையான, 1,250 டன் கடுகு புண்ணாக்கை ராஜஸ்தானில் இருந்து சரக்கு ரயிலில் வாங்கி, நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்டு, அங்கிருந்து லாரிகளில் ஏற்றி பல்வேறு பகுதியில் செயல்படும் கோழித்தீவன அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ