உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தெரு நாய்கள் கடித்து 3 ஆடுகள் உயிரிழப்பு

தெரு நாய்கள் கடித்து 3 ஆடுகள் உயிரிழப்பு

எருமப்பட்டி, பவித்திரம் பகுதியில், மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகளை தெரு நாய்கள் கடித்து உயிரிழந்து வருவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். எருமப்பட்டி யூனியன், பவித்திரம் மலைப்பாறை பகுதியை சேர்ந்தவர் தங்கராசு, 52. இவர், நேற்று காலை வழக்கம் போல் ஆடுகளை தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். ஆடுகள் அனைத்தும் ஒரே இடத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது, திடீரென அங்கு வந்த அடையாளம் தெரியாத தெரு நாய்கள், ஆடுகளை துரத்தி துரத்தி கடித்து ரத்தத்தை குடித்துள்ளது. இதில், மூன்று ஆடுகள் உயிரிழந்தது. ஒரு ஆடு மட்டும் தப்பித்து சத்தம் போட்டவாறு இருந்தது. அதிர்ச்சி அடைந்த தங்கராசு, உயிருக்கு போராடிய வெள்ளாட்டை நாமக்கல் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்தார்.கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்த பகுதியில், 10க்கும் மேற்பட்ட ஆடுகள் நாய்கள் கடித்து உயிரிழந்துள்ளன. எனவே, தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை