நாமக்கல் ; மக்கல்லில், இரண்டு மையங்களில் நடந்த இடைநிலை ஆசிரியர் தேர்வில், 481 பேர் பங்-கேற்றனர். 20 பேர் கலந்து கொள்ளவில்லை.நாமக்கல் மாவட்டத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் இடைநிலை ஆசிரியர் தேர்வு, நேற்று காலை, 10:00 முதல், மதியம், 1:30 மணி வரை நடந்தது. இத்தேர்விற்கு, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 221 பேர், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்-பள்ளியில், 280 பேர் என, மொத்தம், 501 தேர்-வர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதில், 10 பேர் மாற்றுத்திறனாளிகள். மேலும், கண்பார்வை-யற்ற மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத, சொல்-வதை எழுதும் ஆசிரியர் நியமிக்கப்பட்டிருந்தனர். இரண்டு தேர்வு மையங்களில், 26 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டிருந்ததுன. தேர்வில் முறைகேடு நடப்பதை கண்காணிக்க கண்கா-ணிப்பாளர்கள், தலைமை கண்காணிப்பாளர்கள், கண்காணிப்பு குழுக்கள் மற்றும் பறக்கும் படை-யினர் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.தேர்வு மையங்களை, நாமக்கல் கலெக்டர் உமா பார்வையிட்டார். நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில், பார்வை குறைபாடு உடைய மாற்றுத்திறனா-ளிக்கு, சொல்வதை எழுதும் ஆசிரியர் நியமிக்கப்-பட்டு தேர்வு எழுதுவதையும் பார்வையிட்டார். மாவட்டத்தில் நடந்த இடைநிலை ஆசிரியர் தேர்வில், 481 பேர் பங்கேற்றனர். 20 தேர்வர்கள் கலந்துகொள்ளவில்லை.பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் ராஜேந்-திரன், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர்கள் விஜயன், பாலசுப்-ரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.