உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாளை குரூப்-4 தேர்வு மாவட்டத்தில் 51,433 தேர்வர்கள் பங்கேற்பு

நாளை குரூப்-4 தேர்வு மாவட்டத்தில் 51,433 தேர்வர்கள் பங்கேற்பு

நாமக்கல்: ''நாமக்கல் மாவட்டத்தில், 174 மையங்களில், நாளை நடக்கும் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 போட்டித் தேர்வில், 51,433 தேர்வர்கள் பங்கேற்கின்றனர்,'' என, கலெக்டர் உமா பேசினார்.நாமக்கல் மாவட்டத்தில், நாளை நடக்கும், டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 போட்டித் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், அரசு மருத்துவ கல்லுாரி கலையரங்கில் நடந்தது.கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதாவது: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) குரூப்-4 பணிக்கான போட்டித் தேர்வுகள், நாளை (ஜூன், 9) காலை, 9:30 மணிக்கு தொடங்கி, 12:45 மணி வரை நடக்கிறது. நாமக்கல் தாலுகாவில் அமைக்கப்பட்டுள்ள, 39 தேர்வு மையங்களில், 2,073 தேர்வர்கள், மோகனுாரில், 8 மையங்களில், 2,229, சேந்தமங்கலத்தில், 17 மையங்களில், 4,562, ராசிபுரத்தில், 44 மையங்களில், 13,355, ப,வேலுாரில், 21 மையங்களில், 5,872, திருச்செங்கோட்டில், 35 மையங்களில், 10,405, குமாரபாளையத்தில், 10 மையங்களில், 2,937 என, மொத்தம், 174 தேர்வு மையங்களில், 51,433 தேர்வர்கள் எழுதுகின்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்வு பணிகளில் ஈடுபட உள்ள அலுவலர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை சரியாக மேற்கொண்டு, சிறப்பாக பணியாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.டி.ஆர்.ஓ., சுமன், ஆர்.டி.ஓ.,க்கள் பார்த்தீபன், சுகந்தி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ