உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு மகளிர் கல்லுாரியில் சேர்க்கை: 5,757 பேர் விண்ணப்பம்

அரசு மகளிர் கல்லுாரியில் சேர்க்கை: 5,757 பேர் விண்ணப்பம்

நாமக்கல், 'நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரியில், இளநிலை பட்ட படிப்புக்கான, சிறப்பு இடஒதுக்கீட்டில் மாணவியர் சேர்க்கை துவங்கியது' என, கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், 2024-25ம் கல்வியாண்டிற்கான மாணவியர் சேர்க்கை துவங்கி உள்ளது. இக்கல்லுாரியில், 13 இளநிலை பாடப்பிரிவுகள் உள்ளன. அவற்றில், மொத்தம், 970 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. நடப்பு கல்வியாண்டு சேர்க்கைக்காக, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 5,757 மாணவியர், 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பித்துள்ளனர். நேற்று, இளநிலை பட்டப்படிப்பு சிறப்பு இட ஒதுக்கீடு மாணவியர் சேர்க்கை துவங்கியது. கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு தலைமை வகித்தார்.சிறப்பு இட ஒதுக்கீட்டில், அனைத்து மாற்றுத்திறனாளி மாணவியர், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் மகள், ஆதரவற்றோர், தேசிய மாணவர் படை, அந்தமான் நிக்கோபார் தமிழர் என, மொத்தம், 90 சீட்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக, 242 மாணவியர் விண்ணப்பித்துள்ளனர். நேற்று மதியம், 2:00 மணி வரை, 23 மாணவியர் சேர்க்கை நடந்தது. முதற்கட்ட பொது கலந்தாய்வு, வரும், 10 முதல், 14 வரை நடக்கிறது. இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்த மாணவியருக்கு, கல்லுாரியில் இருந்து மொபைல் போன், இணையதளம் மற்றும் எஸ்.எம்.எஸ்., வாட்ஸாப் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ