உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அணையா விளக்கு சாக்கடையில் வீச்சு

அணையா விளக்கு சாக்கடையில் வீச்சு

ப.வேலுார், ஆக. 29--ப.வேலுார் அருகே, கொளக்காட்டுப்புதுார் பகுதியில் கோவிலில் பயன்படுத்தும் அணையா விளக்கு, அப்பகுதி சாக்கடையில் கிடந்தது. நேற்று காலை அந்த வழியாக சென்ற மக்கள், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.ப.வேலுார் போலீசார் விசாரித்து வருகின்றனர். சில்வரில் அமைக்கப்பட்டுள்ள இந்த அணையா விளக்கு, எந்த கோவிலுக்கு உரியது என இதுவரை தெரியவில்லை. இந்த விளக்கின் மதிப்பு, 20,000 ரூபாய்க்கு மேல் இருக்கும். குடிபோதையில் உண்டியல் என நினைத்து, கோவில் விளக்கை திருடிய நபர்கள், அணையா விளக்கு என தெரிந்தவுடன் சாலையோர சாக்கடையில் வீசி சென்றிருக்கலாம் என, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை