உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சரக்கு வாகனம் மோதி பஸ் கிளீனர் பலி

சரக்கு வாகனம் மோதி பஸ் கிளீனர் பலி

நாமக்கல்: நாமக்கல் அடுத்த, கீரம்பூர் வேட்டு வம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன், 50. தனியார் கல்லுாரியில் பஸ் கிளீனராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை, நல்லிபாளையம் பைபாஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்று, இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நடராஜனை, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக, கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நடராஜன் இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ