உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் பறிமுதல் செய்து அழிப்பு

ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் பறிமுதல் செய்து அழிப்பு

நாமக்கல்: ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் உணவுக்கு உகந்தது இல்லை என, அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை, நாமக்கல் நகரில் அதிகளவு விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட மீன் வளத்துறை உதவி இயக்குனர் உமா, ஆய்வாளர் கலைச்செல்வி, நகராட்சி துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, உணவு பாதுகாப்பு அலுவலர் முருகன் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர், 25க்கும் மேற்பட்ட இறைச்சிக்கடை, மீன் இறைச்சி கடைகளில், நேற்று காலை முதல் சோதனை மேற்கொண்டனர். அதில், மூன்று கடைகளில், 36 கிலோ தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை பறிமுதல் செய்து, பிளீச்சிங் பவுடர் மற்றும் பினாயில் ஊற்றி குழிதோண்டி புதைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ