உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சூறாவளிக்கு கம்பங்கள் சேதம் ௭ மணி நேரம் மின் தடை

சூறாவளிக்கு கம்பங்கள் சேதம் ௭ மணி நேரம் மின் தடை

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், நேற்று மாலை, 3:00 மணியளவில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் வேமன்காட்டு வலசு, சத்யா நகர், ஒட்டன்கோவில் உள்ளிட்ட இடங்களில், 4 மின் கம்பங்கள் சேதமாகின. மேலும், கோட்டைமேடு மாரியம்மன் கோவில் உள்ளிட்ட இடங்களில், உயரழுத்த மின் கம்பிகள் மீது மரங்கள் விழுந்ததால், 7 மணி நேரத்திற்கும் மேலாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.இரவு, 10:00 மணிக்கு மேலாகியும் மின் இணைப்பு கொடுக்கப்படாததால் சத்யா நகர், ஜெய்ஹிந்த் நகர், தட்டான்குட்டை, வேமன்காட்டுவலசு, சூரியகிரி மலை, ஒட்டன்கோவில், கல்லங்காட்டுவலசு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். ஆனங்கூர் சாலை, பள்ளிப்பாளையம் சாலைகளில் தென்னை மரங்கள் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் சாய்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ