நாமக்கல் : காங்., நிர்வாகியை கண்டித்து நாமக்கல்லில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, பா.ஜ.,வினர், 64 பேர் கைது செய்யப்பட்டனர். நிறவெறி கருத்துக்களை கூறி அவமானப்படுத்திய காங்., கட்சியின் நிர்வாகி சாம் பிட்ரோடாவையும், அக்கட்சியையும் கண்டித்து, தமிழகம் முழுவதும் பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில், நாமக்கல் பூங்கா சாலையில், கிழக்கு, மேற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். இதில், மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், தேசிய பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், கல்வியாளர் பிரணவ்குமார், மாநில மகளிர் அணி நிர்வாகி சத்தியபானு உள்ளிட்ட பலர் பங்கேற்று, நிறவெறி கருத்துக்களை கூறி அவமானப்படுத்திய காங்., கட்சியின் சாம் பிட்ரோடாவை கண்டித்தும், காங்., கட்சியை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, 55 ஆண்கள், 9 பெண்கள் என, 64 பேரை நாமக்கல் போலீசார் கைது செய்தனர். அவர்களை மாலையில் விடுவித்தனர்.