உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டயர் கழன்ற அரசு பஸ் 5 பேர் சஸ்பெண்ட்

டயர் கழன்ற அரசு பஸ் 5 பேர் சஸ்பெண்ட்

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, அரசு பஸ் டயர் கழன்று ஓடிய விவகா-ரத்தில், 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக, தமிழக போக்-குவரத்து கழக, ஈரோடு மண்டல பொது மேலாளர் ஸ்வர்ணலதா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு போக்குவ-ரத்து கழகம், கோவை லிமிடெட், ஈரோடு மண்டலத்தை சேர்ந்த டி.என்.33 என்.3045 என்ற அரசு பஸ், குமாரபாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது, முன் பக்க இடது சக்கரம் கழன்று ஓடியது. இந்த சம்பவம் தொடர்பாக பராமரிப்பு பணி பார்த்த தொழிநுட்ப பணியாளர் ஜெயபிரகாஷ், போர்மேன் செல்வ-குமார், உதவி பொறியாளர் பாலகிருஷ்ணன், கிளை மேலாளர், தொழில்நுட்ப மேலாளர் உள்ளிட்ட, 5 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை