உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கூலி உயர்வு கோரி விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கூலி உயர்வு கோரி விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையத்தில், 30,000க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தை நடத்தி, சதவீத அடிப்படையில் கூலி உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி, தற்போது, 3 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும்.இந்த கூலி உயர்வை வழங்க கோரி, ஆயக்காட்டூர் பகுதியில் நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில் ஒன்றிய துணை தலைவர் ஜெயவேல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம், நேற்று மாலை நடந்தது. இதில் விசைத்தறி தொழிலாளர்கள் கலந்து கொண்டர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ