Deprecated: mb_convert_encoding(): Handling HTML entities via mbstring is deprecated; use htmlspecialchars, htmlentities, or mb_encode_numericentity/mb_decode_numericentity instead in
/usr/share/phpmyadmin/phpmyadmin/soft/dmrnew/detailamp.php on line
350
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் உமா தலை-மையில் ஜல் சக்தி அபியான் திட்டம் குறித்து, ஊரக வளர்ச்சி மற்றும் பல்வேறு துறையை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோ-சனை கூட்டம் நடந்தது.மத்திய அரசின் கண்காணிப்பு அலுவலர் மற்றும் பாதுகாப்பு உற்-பத்தி துறை ஒருங்கிணைப்பு இயக்குனர் அஜித், மத்திய நிலத்தடி நீர் வாரிய விஞ்ஞானி தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.கலெக்டர் உமா பேசுகையில்,'' மழை நீர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு இயக்கம் வாயிலாக நாமக்கல் மாவட்டத்திற்கு உட்-பட்ட அனைத்து ஊராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் அனைத்து துறைகளின் மூலம் மழை நீரை சேகரித்து நிலத்தடி நீரை மேம்பாடு செய்திட அமைக்கப்பட்ட கட்டமைப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதில் சிமென்ட் கான்-கிரீட் தடுப்பணைகள், மழைநீர் சேகரிப்பு அமைப்பு, தனிநபர் மற்றும் சமுதாய உறிஞ்சிகுழிகள், மழைநீர் மீள் நிரப்பு குழிகள், குளங்கள், துார்வாருதல், பண்ணை குட்டைகள், வாய்க்கால் துார்-வாருதல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. 'ஜல் சக்தி அபியான்' திட்டத்தின் பணிகளை சிறந்த முறையில் மேற்கொள்ளவும், நீரின் முக்கியத்துவத்தை பெண்களிடம் எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி, நீர் மேலாண்மையில் பெண்களை முக்கிய பங்காற்ற செய்திட வேண்டும்,'' என்றார்.ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் கலாநிதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், செயற்பொ-றியாளர் குமார், சி.இ.ஓ., மகேஸ்வரி மற்றும் பொதுப்பணித்-துறை, நீர்வளத்துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, ஊரக வளர்ச்சி, நகராட்சி அலு-வலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்-டனர்.