உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / களங்காணி அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் 25 ஆண்டுக்கு பின் சந்திப்பு

களங்காணி அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் 25 ஆண்டுக்கு பின் சந்திப்பு

நாமக்கல்: நாமக்கல், களங்காணி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில், 1998 - 99ம் கல்வி ஆண்டில், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியர், 25 ஆண்டுகளுக்கு பின் சந்திக்கும் நிகழ்ச்சி, நாமக்கல்லில் நடந்தது. அப்போது, தாங்கள் படித்த காலத்தில் நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்தனர். மேலும், தங்கள் குடும்ப உறுப்பினர்கள், அவர்கள் மேற்கொண்டுள்ள பணிகள் குறித்தும் பகிர்ந்து கொண்டனர்.அவர்களில் பலரும், தற்போது தமிழக மருத்துவ கல்லுாரிகள், அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களாகவும், மத்திய வேளாண் துறை ஆராய்ச்சி கழகத்தில் ஆராய்ச்சியாளர்களாகவும், பல்வேறு அரசு, தனியார் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அரசு ஊழியர்களாவும், தனியார் தொழில் நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பொறியாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். மேலும், பலர், சுயதொழில் தொடங்கி பல்வேறு மக்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் மாணவ, மாணவியர், தங்கள் முன்னேற்றத்தில் களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி பெரும் பங்கு வகித்ததை பெருமையுடன் பகிர்ந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி