நாமக்கல் : நாமக்கல் லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கையையொட்டி, முகவர்கள், அலுவலர்கள் என அனைவரும் பலத்த சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர்.நாமக்கல் லோக்சபா தொகுதியில், சங்ககிரி, ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல் ப.வேலுார், திருச்செங்கோடு என, ஆறு சட்ட சபை தொகுதிகள் உள்ளன. அவற்றிற்கான தேர்தல் கடந்த ஏப்., 19ல் நடந்தது. கடந்த, ஏப்., 19ல் ஓட்டுப்பதிவு நடந்தது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், விவிபேட் ஆகியவை, திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் தொழில் நுட்ப கல்லுாரியில், மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், நேற்று ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு வந்த வேட்பாளர்கள், முகவர்கள், அலுவலர்கள் என, அனைவரையும் பலத்த சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், தலா 14 மேஜைகள் வீதம், மொத்தம், 84 மேஜைகள் போடப்பட்டிருந்தன. காலை, 8:00 மணிக்கு, தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதையடுத்து, 8:30 மணிக்கு மின்னணு ஓட்டுகள் எண்ணப்பட்டன.ஓட்டு எண்ணும் அறைக்கு கட்டாயம் யாரும் மொபைல் போன், கால்குலேட்டர் உள்பட எலக்ட்ரானிக் சாதனங்களை எடுத்து வரக்கூடாது என அறிவிக்கப்பட்டிருந்ததால், மையத்துக்குள் வந்த அனைவரையும், தீவிர சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்பட்டனர்.