உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பிரதமராக மோடி பதவியேற்பு வக்கீல் அணி கொண்டாட்டம்

பிரதமராக மோடி பதவியேற்பு வக்கீல் அணி கொண்டாட்டம்

ராசிபுரம் : பிரதமராக மோடி, மூன்றாவது முறை பதவியேற்றதையடுத்து ராசிபுரம் வக்கீல்கள் அணி நேற்று பட்டாசு வெடித்து கொாண்டாடினர். பிரதமராக மோடி, மூன்றாவது முறை நேற்று முன்தினம் பதவி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து நேற்று ராசிபுரம் பா.ஜ., வக்கீல்கள் அணி, ஆத்துார் பிரதான சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மாவட்ட பா.ஜ., தமிழ் நலன் பிரிவு தலைவர் வக்கீல் குமார் தலைமை வகித்தார். வக்கீல் சீனிவாசன், மாவட்ட துணைத்தலைவர் மணிகண்டன், வக்கீல்கள் ஜெயராஜ், பெரியசாமி, திருமூர்த்தி, தினேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சாலையில் அவ்வழியாக வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி